தடுத்துவைக்கப்பட்ட இலங்கை அகதிகளை அணுக இந்தியா அனுமதி கோருகிறது

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியக் கடற்பரப்பில் இருந்து படகில் சட்டவிரோதமாகச் சென்ற ஆஸ்திரேலிய தஞ்சம் கோரிகளுடன் இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்பு கொள்ள இந்திய அரசு அனுமதி கோரியிருக்கிறது.

scott_morrisonsushma_swarajrajnath_singhindiaaustralia

இந்தியாவில், புதுச்சேரிக்கு அருகே உள்ள கீழ்ப்புத்துப்பட்டு என்ற கிராமத்திலும், பிற சில அகதிகள் முகாம்களில் இருந்தும் சுமார் 150 இலங்கை அகதிகள் படகில் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்று அங்கு ஆஸ்திரேலியக் கடற்படையினரால் தடுத்துவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து இந்திய அரசிடம் பேச ஆஸ்திரேலியக் குடிவரவு அமைச்சர் ஸ்காட் மாரிசன் நேற்று புது தில்லி வந்தடைந்து, இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது பேசிய ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்காட் மோரிஸன், கடந்த ஜூன் மாதம் 157 அகதிகளை ஏற்றி சென்ற படகை ஆஸ்திரேலிய அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவிற்குள் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக யாரும் குடிபுகுவதையோ, அல்லது இந்தியாவிலிருந்து யாரும் சட்டவிரோதமாக குடிஅகல்வதையோ இந்திய அரசு கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியிருப்பதாக இந்திய அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.

இது தவிர, இந்தப் பிரச்சினை சட்டரீதியாகவும், மனிதாபிமான ரீதியிலும் கையாளப்படவேண்டும் என்றும், யாருக்கும் எந்தவித தீங்கும் ஏற்படக்கூடாது என்றும், குறிப்பாக சிறார்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும் இந்தியத் தரப்பு வலியுறுத்தியது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

Recommended For You

About the Author: Editor