டேப்லட்”டுக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியுமா??

டாக்டர் கிட்ட போனால் சாப்பிட டேப்லட் தருகிறார்.. சும்மா இருக்கும் நேரத்திலும் நம்மவர்கள் பலருடைய கையிலும் டேப்ல்ட்தான் அலங்கரிக்கிறது.

சரி இந்த டேப்லட்டுக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியுமா..

இதுவரை யாருமே அதுகுறித்த தமிழ் வார்த்தையை எங்குமே எழுதியதாகவோ அல்லது பேசியதாகவோ நினைவில்லை. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி அதைத் தமிழ்ப்படுத்தியுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்திலும் அந்த தமிழ் வார்த்தையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

karunanethy

கருணாநிதியின் பேஸ் புக் பக்கத்தில் வெள்ளைத் துண்டு, முண்டா பனியன், வேட்டி கட்டிய தோற்றத்தில் இருக்கையில் அமர்ந்து டேப்லெட் பார்ப்பது போன்ற படம் வெளியாகியுள்ளது.

அதில் வரைப்பட்டிகை ‘டேப்லட்’ வாயிலாக சமூக வலைத்தளங்களில் எனக்கு வரும் கருத்துக்களை காணும்போது என்று குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.

இதன் மூலம் அறிய வருவது டேப்லெட் என்ற வார்த்தைக்கு கருணாநிதி சூட்டியுள்ள தமிழ்ப் பெயர் வரைப்பட்டிகை.

நிறையப் பேர் பல காலமாக வாழ்த்துக்கள் என்றே பேசி, எழுதி வந்தனர். இன்னும் கூட பலர் அப்படித்தான் எழுதுகிறார்கள். ஆனால் அதை வாழ்த்துகள் என்று எழுத வைத்தவர் கருணாநிதி.

சீமான் வாழ்த்துக்கள் என்ற பெயரில் ஒரு படம் எடுத்தார். அவரை அழைத்து வாழ்த்துகள் என்று மாற்றித் திருத்தியவர் கருணாநிதி. அதை அவரே சொல்லியுள்ளார்.

பார்க்கலாம், கருணாநிதியின் வரைப்பட்டிகை எந்த அளவுக்குப் பிரபலமாகிறது என்று.