டலஸை ஆதரிப்பதற்கு எழுத்துமூலமான உறுதிப்பாட்டைப் பெற்றது கூட்டமைப்பு

புதிய இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அகழப்பெருமவுக்கு இன்றைதினம் ஆதரவாக வாக்களிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டலஸ் அகழப்பெரும மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடமிருந்து எழுத்துமூலமான ஆவணம் பெறப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அகழப்பெருவை ஆதரிப்பதற்காக நிபந்தனைகளை விதித்து எழுத்துமூலமான ஆவணத்தினைப் பெற்றுக்கொண்டதா இல்லையா என்பது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

‘புதிய இடைக்கால ஜனாதிபதி டலஸ் அகழப்பெருமவை ஆதரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதான முடிவினை எடுத்துள்ளோம்’ என்று அதன் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி அறிவித்திருந்தார்.

எனினும், எழுத்துமூலமான உடன்பாடு பெறப்பட்டதா என்பது தொடர்பில் வினவியபோது, ‘தற்போதைக்கு தன்னால் பதிலளிக்க முடியாது’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் கூட்டமைப்பு எழுத்துமூலமான உறுதிப்பாட்டை வழங்கியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, சுமந்திரன், குறித்த செய்தியை நிரகாரித்துள்ளதோடு, அச்செய்தி டலஸ் அழகப்பெருமவின் வெற்றியை பாதிக்கும் வகையில் திட்டமிடப்பட்டது என்றும் தனத டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.