ஜேர்மன் தூதுவர் வடக்கு முதல்வர் சந்திப்பு

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் டோடேம் (Jorn rohdem) நேற்று யாழ் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

173972756untitled-1

இவர் நேற்று மாலை 05.00 மணியளவில் யாழ் கோவில் வீதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு சென்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, வட மாகாணத்தில் ஜேர்மன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள், மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள், மீள்குடியேற்றங்கள், சுகாதார, கல்வி, வீடமைப்புத் திட்டங்கள், சமூக மேன்பாட்டு திட்டங்கள் தொடர்பாக ஜேர்மன் தூதுவர் தன்னிடம் கேட்றிந்து கொண்டதாக வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபையின் உறவுகள் தான்தோன்றித்தனமாக காணப்படுகின்றது எனவும், இதனால் எங்களால் செய்யப்படுகின்ற பல செயற்பாடுகளுக்கு பல இடையூறுகள் ஏற்படுகின்றது எனவும், தான் இச் சந்தர்ப்பத்தில், ஜேர்மன் தூதுவரிடம் சுட்டிக்காட்டியதாகவும், வடக்கு முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor