ஜெயக்குமாரி சித்திரவதை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது

பாலேந்திரன் ஜெயக்குமாரி உட்பட பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சுட்டிகாட்டியுள்ள தேசிய சமாதானப்பேரவை இது குறித்து கவனம் செலுத்துமாறு தேசிய மனித உரிமை ஆணைக்குழுவை கோரியுள்ளது.

jeyakumari

பாலேந்திரன் ஜெயக்குமாரியின் சர்ச்சைக்குரிய விதத்திலான கைதும், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாததும் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் கண்மூடித்தனமான தண்டைனைக்காக இலக்கு வைக்கப்படுகிறார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியின் போது கொல்லப்பட்டவர்களுக்கு பாலேந்திரன் ஜெயக்குமாரி உதவினார் என்ற தனது குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு அரசாங்கம் இதுவரை நம்பகத்தன்மை மிக்க ஆதாரங்கள் எதனையும் முன்வைக்கவில்லை.

குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல் அவரை காலவரையறையின்றி தடுத்து வைத்திருப்பது அவர் பழிவாங்கப்படுகிறார், காணமற்போனோர் சார்பாக குரல் கொடுப்பதற்கான அவரது அடிப்படை உரிமை பறிக்கப்படுகின்றது என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அவரை தடுத்து வைத்திருப்பதன் மூலமாக ஏனைய மனித உரிமை ஆர்வலர்களுக்கும் நீங்களும் இவ்வாறு பழிவாங்கப்படுவீர்கள் என்ற அச்சமூட்டும்செய்தி தெரிவிக்கப்படுகின்றது.

நாங்கள் அவரது உளநலம் குறித்தும் கவலை கொண்டுள்ளோம். அவர் சித்திரவதை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான தொடரும் மனித உரிமை மீறல்களே மக்கள் யுத்தத்தின் இறுதி தருணங்களில் என்ன நடைபெற்றது என்பது குறித்த ஐ.நா விசாரணைக்கு ஆதரவளிக்க காரணமாகவுள்ளது. ஜெயக்குமாரியின் கைது அரசாங்கத்திடமிருந்து நீதி கிடைக்காத நிலையில் ஐ.நா விசாரணைக்குழுவின் செல்ல நினைப்போரை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.