ஜெனிவா செல்வதை தவிர்த்தார் அனந்தி!

Ananthy - elilanபல்வேறு சிக்கல்கள் காரணமாக எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்குச் செல்வதைத் தான் தவிர்த்துக் கொள்வதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் அமர்வு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன் போது ஜெனிவாவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்களுடன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் செல்லவேண்டும் என்ற பிரேரணையை அனந்தி முன்மொழிந்திருந்தார்.

இந்தப் பிரேரணைக்கு ஏகமனதாக ஆதரவு வழங்கிய வடக்கு மாகாணசபை, ஜெனிவாவுக்குச் செல்வதற்குப் பொருத்தமானவர் அனந்தியே என்றும் தீர்மானித் திருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் நேற்றுக் கருத்து வெளியிட்டுள்ள திருமதி அனந்தி சசிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஜெனிவாவுக்குச் செல்ல வேண்டும் என்றேதான் பிரேரணையை முன் வைத்திருந்ததாகவும், தான் செல்ல வேண்டும் என்று எந்த வொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.

அத்துடன் மாகாண சபை தனக்கு வழங்கிய அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த அனந்தி, பல்வேறு சிக்கல்கள் காரணமாக ஜெனிவா அமர்வை தவிர்ப்பதாகக் கூறினார்.

தொடர்புடைய செய்தி

ஜெனீவா செல்ல அனந்திக்கு அனுமதி