ஜம்மு காஷ்மீரில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கிய மதத்தினரைக் குறிவைத்துக் கடந்த சில நாட்களாகப் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

கடந்த மே மாதத்தில் மட்டும் 7 பேர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், நேற்று வங்கி மேலாளராக பணிபுரிந்த விஜய் குமார் என்பவரைப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

இந்த பரபரப்பு முடிவதற்கு தற்போது மற்றொரு படுகொலையும் அரங்கேறியுள்ளது.