ஜப்பான் நாட்டு அனுபவத்துடன் உயர வளரும் பனைச் சபை!

பனை அபிவிருத்தி சபையின் உற்பத்திப் பொருட்களை மிகவும் வெற்றிகரமாக சந்தைப்படுத்துகின்ற நுட்பங்களை கற்பித்துக் கொடுக்கின்றமைக்கு ஜப்பான் நாட்டில் இருந்து துறை சார்ந்த நிபுணர் ஒருவர் வருகை தந்து உள்ளார்.

panai-jappan

ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு முகவர் நிறுவனத்தின் பெண் அதிகாரிகளில் ஒருவரான யோகோ கவாஸ் என்பவரே இரு வருடங்களுக்கு நாட்டில் தங்கி இருந்து சந்தைப்படுத்தல் உத்திகளின் நுட்பங்களை கற்பித்துக் கொடுக்க உள்ளார். இவர் சந்தைப்படுத்தல் துறையில் 14 வருட கால அனுபவம் உடையவர். அத்துடன் சரளமாக தமிழ் பேசக் கூடியவர்.

பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினத்துக்கும் ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு முகவர் நிறுவனத்தின் உயர்நிலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் பலனாகவே இம்முகவர் நிறுவனத்தின் தொண்டர் சேவைத் திட்டத்தின் கீழ் இவரின் சேவை கிடைக்கப் பெற்று உள்ளது.

இவரை பனை அபிவிருத்தி சபை ஊழியர்களுக்கு தலைவர் பசுபதி சீவரத்தினம் நேற்று சம்பிரதாயபூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்து உரையாற்றினார்.

அவர் தனது உரையில் ..

“ யுத்தத்தால் அழிவுற்ற ஜப்பான் தேசத்தை ஜப்பானிய மக்கள் கடின உழைப்பாலும், கடமை உணர்வாலும், தேசப் பற்றாலும் கட்டி வளர்த்தனர். ஜப்பான் அரசாங்கம் அழித்தவர்களை பழி வாங்குகின்ற எண்ணத்தை கொண்டிருக்கவில்லை. மாறாக இணக்க அரசியல் வழிமுறைகள் மூலமே ஜப்பானை உலகின் தலை சிறந்த நாடுகளில் ஒன்றாக கட்டி எழுப்பியது. எனவே ஜப்பானியர்களிடம் இருந்து சுறுசுறுப்பு, கடமை உணர்வு, தேசப் பற்று ஆகியவற்றை கற்று நாமும் எமது பனை அபிவிருத்தி சபையை வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்வோம். ” என அவர் மேலும் கூறினார்

Recommended For You

About the Author: Editor