ஜனாதிபதி-சர்மா சந்தித்துப்பேச்சு

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வருகைதந்த பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் இன்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

8(7)

ஆலரிமாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கமலேஷ் சர்மாவுடன் வருகைதந்திருந்த ஐந்து பிரதிதிகளும் பங்கேற்றனர்.

இதேவேளை, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை, சர்மா தலைமையிலான குழுவினர் ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று மாலை 3 மணியளவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.