ஜனாதிபதியை சந்தித்தார் முதலமைச்சர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

mahintha-vicky

இந்த சந்திப்பின் போது இருவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

வடமாகாண சபையின் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துடன் வடமாகாண சபையின் எதிர்கால நிர்வாக செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

mahintha-vicky-2

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சரவை செயலாளர் சுமித் அபேசிங், நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர ஆகியோரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் உடன் இருந்தனர்.