ஜனாதிபதியின் மருமகள் என்று கூறி பண மோசடி!

cashஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மருமகள் என்று கூறி ரஷ்ய பிரஜையிடம் பணமோசடியில் ஈடுப்பட்டதாக கூறப்படும் இலங்கை பெண்ணொருவரை கைதுசெய்வதற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி பெண் தன்னிடமிருந்து 690,000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட ரஷ்யா நாட்டைச் சேர்ந்த வணிகர் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.

கொம்பனித் தெருவிலும் மகரகமையிலும் காணிகளை வாங்குவதற்காக தான் 690,000 அமெரிக்க டொலர்களை அப்பெண்ணிடம் கொடுத்ததாகவும் ஆனால், அந்த காணிகளின் உறுதிகள் போலியானவை என தான் அறிந்துகொண்டதாகவும் ரஷ்ய வணிகர் குற்றப் புலனாய்வு பிரிவினிரடம் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரின் இரண்டு வங்கிக் கணக்குகள் தொடர்பாக விவரமான அறிக்கையை சமர்பிக்கும்படி வங்கி முகாமையாளர்களுக்கு பணிப்புரை விடுக்க வேண்டும் என குற்றப் புலனாய்வு பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவானிடம் கோரியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor