சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில்…

உத்தரபிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 2–ந் திகதி வாரணாசியில் பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தின் முடிவின் போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 14–ந்தேதி வீடு திரும்பினார்.

இந்த நிலையில் அறுவை சிகிச்சையின் போது போடப்பட்ட தையல்களை பிரிப்பதற்காக சோனியா காந்தி நேற்று கங்காராம் மருத்துவமனைக்கு சென்றார்.

தையல்கள் பிரிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அங்கு அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அடுத்த 2 நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கி இருப்பார் என மருத்துவமனை வட்டாரங்கள் மற்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Recommended For You

About the Author: Editor