செல்லப்பிராணிகளுக்கு புதிய சட்டமூலம்?

செல்லப்பிராணிகளை வீட்டில் அல்லது விற்பனை செய்யும் கடைகளில் வைத்திருப்பது தொடர்பிலான புதிய சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர்
எச். ஆர்.மைத்ரிபால வெள்ளிக்கிழமை (08) தெரிவித்தார்.

Maithreepala.Sirisena

நாடாளு மன்றத்தில் நேற்று இடம்பெற்ற தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

இப்புதிய சட்டமூலமானது செல்லப்பிராணிகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கக்கூடியதாக அமையும். இது சட்ட வரைஞர் திணைக்களம் மூலம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

பாதைகளில் பிச்சைக்காரர்களும் அவர்களுடன் இருக்கும் தெரு நாய்களும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. அது மாத்திரமல்லாது பிச்சைக்காரர் மனரீதியாக பாதிக்கப்பட்டு சக பிச்சைக்காரர்களை அடித்து கற்களால் தாக்கி கொன்று விடுகின்றர்.

இது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் உட்பட அனைத்து பிராணிகளும் சுதந்திரமான சூழலை உருவாக்குவது முக்கியமாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்தார்.

மேலும் 1938ஆம் ஆண்டு காலணித்துவ காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நாய்களின் பதிவுக்கான கட்டளைச்சட்டம் தற்போது காலாவதியாகிவிட்டது.

சட்டத்துக்கு ஒரு ஆண் நாய்க்கான அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கு 5 ரூபாவும் பெண் நாயொன்றுக்கு 7.50 ரூபாவும் அறவிடப்பட்டது. இச்சட்டம் திருத்தப்படவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor