செப்டம்பரில் ‘ஐ’ இசை வெளியீடு…!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் தமிழில் வெளிவர உள்ளன. அவர் தற்போது இசையமைத்து வரும் இரண்டு பிரம்மாண்ட படங்களான ‘காவியத் தலைவன், ஐ’ படங்களில் ‘காவியத் தலைவன்’ படத்தின் இசை வெளியீடு கடந்த வாரம் நடைபெற்றது. பழைய நாடக வரலாற்றை சொல்லும் இந்தப் படத்தில் ரஹ்மானின் இசை முற்றிலும் மாறுபட்டு அமைந்துள்ளது.

shankar vikram new movie 'I' First look advertisements posters

சில பாடல்கள் திரும்பத் திரும்ப கேட்க வைப்பதாக அவரது ரசிகர்கள் சொல்கிறார்கள். இந்தப் படத்தையடுத்து ரஹ்மானின் விருப்பத்திற்குரிய இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் இப்படம் கடந்த இரண்டு வருடங்களாக உருவாகி வருகிறது. முற்றிலும் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்று சொன்னாலும் பல மாதங்களாக சென்னையில், பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு அரங்கு அமைக்கப்பட்டு அதில் எமி ஜாக்சன் மட்டும் நடனமாடும் ஒரு பாடல் காட்சியை படமாக்கத் திட்டமிட்டார்கள்.

ஆனால், அது இதுவரை படமாக்கப்படவில்லையாம். இயக்குனர் ஷங்கருக்கும், எமி ஜாக்சனுக்கும் இடையே சண்டை உருவானதால் அவர் அந்தப் பாடலை படமாக்காமல் வைத்திருக்கிறார் என்கிறார்கள்.

எமி ஜாக்சன் அவருடைய படு கவர்ச்சியான புகைப்பபடங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதுதான் ஷங்கரின் கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள். கடந்த வாரம் கூட ஒரு நீச்சல் உடை புகைப்படத்தை எமி ஜாக்சன் டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படங்கள் ‘ஐ’ படத்தின் இமேஜை பாதிக்கும் என ஷங்கர் கருதுவதாகச் சொல்கிறார்கள்.

படத்தின் இசை வெளியீட்டிற்கு முன்னதாக அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டு அந்தப் பாடல் காட்சி படமாக்கப்படுமா என்பது சந்தேகமாக இருப்பதாகவே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஷங்கரின் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்றே அவரது நெருங்கிய வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. இந்த சண்டை எங்கே போய் முடியுமோ என்பது கவலையான விஷயம்தான் என்றும் சொல்கிறார்கள்.

Recommended For You

About the Author: Editor