சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி

sportsnews-logoசென்னைக்கு கிரிக்கெட் தொடரில் பங்குபற்றச்சென்ற இலங்கை 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி, அங்கு போட்டிகளில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர்களுக்கு விளையாட அனுமதி வழங்கப்படவில்லை என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு இலங்கை 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி, விமான நிலையத்தை வந்து சேர்ந்ததாகவும், அதன் பின்னர் அவர்கள் சென்னையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கவைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை தமிழக முதல்வர் பற்றி இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட கட்டுரை மற்றும் கேலிச்சித்திரம் போன்றவற்றின் பின்னணி சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் எனவும் கடந்த காலங்களில் நிலவி வரும் அரசியல் சிக்கல்களின் பின்னணி இன்னும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று முதல் 7ஆம் திகதி வரை குறித்த போட்டி தொடர் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.