சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!

‘யா யா’ படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்த காதல் சந்தியா ‘கத்துக்குட்டி’ படத்தில் சூரிக்கு ஜோடியாக ஆட்டம் போட்டிருக்கிறார். இதுநாள் வரை குத்துப் பாடலில் ஆடாமலிருந்த ‘காதல்’ சந்தியா கத்துக்குட்டி படத்தில் குத்துப்பாடலுக்கு செம ஆட்டம் போட்டிருக்கிறார்.

kathukuddi-350x210

படத்தின் ஹீரோ நரேன் பாடல் முழுக்கவே ஆடமாட்டார். நரேனின் நண்பராக ஜிஞ்சர் என்கிற கேரக்டரில் நடிக்கும் சூரி அந்தப் பாடல் முழுக்கவே சந்தியாவோடு இணைந்து கலக்கலான ஆட்டம் போட்டிருக்கிறார். மிக நெருக்கமாக ஆட சூரி ரொம்பவே கூச்சப்பட, உங்களுக்கு டான்ஸ் மூவ்மெண்ட் நன்றாக வருகிறது.

இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? உங்களின் காமெடி நடிப்புக்கு நான் பெரிய ஃபேன். அதனால் தயங்காமல் ஆடுங்கள்” என சந்தியா சொன்னதுதான் தாமதம். படு வேகமான மூவ்மெண்ட்ஸ் போட்டு சந்தியாவையே ஓவர் டேக் செய்கிற அளவுக்கு ஆடி, கைத்தட்டல் பெற்றார் சூரி.