சு.க வேட்பாளர்கள் விபரம் விரைவில்: அங்கஜன்

aygajan-ramanathanவடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

சுதந்திரக்கட்சியின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்தவர்களை முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிறேமஜயந்த சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு தொடர்பில் யாழ் மாவட்ட சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராதநாதன் தெரிவிக்கையில் .

வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தவர்களுடன் சந்திப்பொன்று இடபெற்றுள்ளது.

இந்த தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் 6 பேர் போட்டியிடவுள்ளனர் இருந்தபோதும் இம் மாதம் 25 ஆம் திகதிக்குப் பின்னரே போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை எமது கட்சி வெளியிடும் என்று அவர் தெரிவித்தார்.

அதேவேளை சுதந்திரக்கட்சியின் சார்பில் முன்னாள் விடுதலைப்புலிகளின் ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்டர், சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராத நாதன், சட்டத்தரணி முடியப்பு றேமீடியஸ், சிராஸ், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி சுதந்திரக்கட்சியில் இணைந்துகொண்ட சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் சர்வனாந், ஸ்ரீபன், நெல்லியடி வர்த்தக சங்கத்தின தலைவர் அகில தாஸ் இன்னும் சிலர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.