சுன்னாகம் சந்தையில் தீ

சுன்னாகம் பொதுச் சந்தையில் நேற்றிரவு தீ பிடித்ததினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் பொதுமக்களும் தீயணைப்பு படையினரும் இணைந்து அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

நேற்றிரவு 7.45 மணியளவில் சந்தைக் கட்டடத்தில் தீ பிடித்து எரிந்துள்ளது. அதனைக் கண்ட பொதுமக்கள் அங்கு ஒன்று கூடி தீயை அணைத்த தோடு தீயணைப்பு சேவைக்கும் தகல் கொடுத்ததனால் இரு தரப்பினரரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதனால் பெரிய நட்டம் தவிர்க்கப்பட்டது. சிறியளவிலான சேதமே ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் பழக்கடை உள்ள பக்கமே தீ பிடித்துள்ளது. வாழைக்குலை பழுக்க வைப்பதற்காகப் புகையூடப்பட்டிருந்ததாகவும் அதன் மூலமாகவே தீ பரவியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.