சீனா பூகம்பத்தில் குறைந்தது 589 பேர் பலி

சீனாவின் தென் மேற்கு மாகாணமான யுன்னானில் ஏற்பட்ட பூகம்பத்தில் குறைந்தது 589 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சீன அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த பூகம்பம் ஏற்பட்ட பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நதி ஒன்று அடைபட்ட நிலையில், அங்கு வெள்ளம் ஏற்படக்கூடும் என்ற கவலைகள் இப்போது புதிதாக ஏற்பட்டிருக்கின்றன.

cn_yunnan_quake_water

இந்த நதி இப்போது உடைப்பெடுத்து கீழ்மட்டத்தில் இருக்கும் பகுதிகளை வெள்ளப்பெருக்கில் ஆழ்த்தக்கூடும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஆயிரக்கணக்கானோர் இப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

மலைப்பகுதி சாலைகளை நிலச்சரிவுகள் மறித்திருக்கும் நிலையில், மீட்புப்பணியாளர்கள் அங்கு பாதிக்கப்பட்ட மக்களை அணுகுவதை கடினமாக்கியிருக்கின்றன. பூகம்பத்துக்குப் பின்னர் ஏற்படும் நில அதிர்வுகளும், தொடர்ந்து பெய்து வரும் மழையும் உயிர் தப்பியவர்களின் நிலையை மேலும் சிக்கலாக்கிவருகின்றன.

Recommended For You

About the Author: Editor