சிவ தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவுதினம்

thankamaammakkuddiசிவ தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று வியாழக்கிழமை தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது.

பூசை வழிபாடுகளை தொடர்ந்து ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள அன்னையின் நினைவாலயத்தில் நினைவுச்சுடர் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது.இதில் தலைவர் ஆறுதிருமுருகன், ஆலய பூசகர்கள் மற்றும் மகளீர் இல்ல மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.