சிவபூமி அறக்கட்டளைக்கு மற்றொரு விருது; சிறுவர் மனவிருத்திப் பாடசாலை தேசிய நிலையில் முதலிடம்

இலங்கை சமூக சேவைகள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சுய அபிமானி 2019ஆம் ஆண்டு திட்ட ஆய்வில் வடமாகாணம் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் இயங்கும், கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை இலங்கையில் முதலிடம் பெற்றுள்ளது.

2003ஆம் ஆண்டு கலாநிதி ஆறு.திருமுருகனால் நிறுவப்பட்ட இந்தப் பாடசாலை சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச ரீதியில் மூன்று தடவை சிறப்புத் தேவைக்குரிய மாணவர்களின் ஒலும்பிக் போட்டியில் கிறீஸ்நாட்டிலும், ஆஸ்ரேலியாவிலும், அமெரிக்காவிலும் இப்பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியதுடன் பதக்கங்களும் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்திருந்தனர்.

சமூக சவைகள் திணைக்கள பணிப்பாளர் ஹரத் கடிதம் மூலம் இவ்விருதுபற்றி, கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை நிர்வாகி கலாநிதி ஆறு. திருமுருகனுக்கு அறிவித்துள்ளார்.

Related Posts