சிறுமியை தாக்கிய தாய்க்கு மீண்டும் விளக்கமறியல்

யாழ் நீர்வேலிப் பகுதியில் தனது 6 வயதுடைய சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயை எதிர்வரும் 20ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டக் காணியில், சிறுமியொருவரை பெண்ணொருவர் கத்தியினால் மிகமோசமாகத் தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ, கடந்த செப்டெம்பர் மாதம் சமூகவளைத் தளங்களில் வைரலாக பரவியது.

இதனையடுத்து அந்த சிறுமியை தாக்கிய தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

Recommended For You

About the Author: Editor