சிமெந்து தொழிற்சாலையில் இரும்பு கடத்தல் : நேரடி விசாரணை ஆரம்பம்

காங்கேசன்துறை சிமெந்து உற்பத்தித் தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்களின் இரும்புப் பகுதிகள் வெட்டிக் கடத்தப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில் யாழ்.பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் பெரேரா இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் :-

காங்கேசன்துறை சிமெந்து உற்பத்தித் தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்களின் இரும்பினாலான பகுதிகள் வெட்டப்பட்டுத் தென்பகுதிக்குக் கடத்தப்படுகின்றமை தொடர்பிலான செய்திகளை அறிந்துள்ளோம்.

குறித்த செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பில் அங்கு சென்று பார்த்து விசாரணை நடத்தவுள்ளோம். அதன் பிறகு மேலதிக நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.