சாவகச்சேரி வைத்தியசாலையில் பார்வையாளர் மண்டபம் திறப்பு!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பார்வையாளர் மண்டபம் இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

chavakachcherey-hospital

வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத் தலைவர் யோ.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பார்வையாளர் மண்டபத்தை யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் நாடா வெட்டித் திறந்து வைத்ததுடன் பெயர்ப்பலகையையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர் வைத்தியக் கலாநிதி ரி.ஸ்ரீகரன், வைத்திய கலாநிதி ச.அம்பிகைபாகன், சாவகச்சேரி நகரபிதா இ.தேவசகாயம்பிள்ளை, இளைப்பாறிய அதிபர் மு.நாகேந்திரராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த அமரர்களான வ.பொன்னுச்சாமி திருமதி வ.பொன்னுச்சாமி திருமதி இ.உருத்திரன் ஆகியோரின் நினைவாக இவர்களது குடும்பத்தினரால் இந்த மண்டபம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor