சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் இல்லத்தின் மீது தாக்குதல்

1883850591arrசாவகச்சேரி பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் சிறீஸ்கந்தராசா ஸ்ரீரஞ்சனின் மீசாலையிலுள்ள இல்லத்தின் மீது இன்று அதிகாலை 1.30 அளவில் ஆயுதந்தாங்கிய இனந்தெரியாத குழு ஒன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆறு மோட்டார் சைக்கிள்களில் வந்த 12 க்கும் மேற்பட்ட நபர்களால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீரஞ்சன் தெரிவித்தார்.

´நள்ளிரவளவில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்கள் எனது வீட்டை நோட்டமிடுவதை அறிந்து கொண்டேன். பின்னர் 1.30 அளவில் 12 பேருக்கு மேற்பட்டவர்கள் வீதியிலுள்ள படலையை உடைத்துத் தள்ளிக்கொண்டு உள்ளே நுளைந்தார்கள். நானும் மனைவியும் பிள்ளைகளும் பின்னால் தப்பினோம்.

வீட்டினுள் நுளைந்தவர்கள் பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதல்களை மேற்கொண்டதோடு, ரி.வி. உட்பட அனைத்துப் பொருட்களையும் அடித்து நொருக்கினர். வீட்டின் கூரையையும் சேதப்படித்தினர். இறுதியாக துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தனர்´ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சம்பவத்தை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாவீரர் துயிலும் இல்லங்களை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கும் பிரேரணை சாவகச்சேரி பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோது பிரதேச சபையின் உறுப்பினரான ஸ்ரீஞ்சன் அதனை முன் மொழிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.