சாதாரணதர பரீட்சை மீள் திருத்த விண்ணப்பங்களுக்கான கால எல்லை அறிவிப்பு!

நேற்று வெளியான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை முடிவுகளை மீள் பரிசீலனை செய்யக் கோருபவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ட்பளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

மீள்பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் பாடசாலை பரீட்சாத்திகள் பாடசாலை அதிபருடாக விண்ணப்பிக்குமாறும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் தேசிய பத்திரிகைகளில் விரைவில் வெளியிடப்படவுள்ள மாதிரி விண்ணப்பப்படிவங்களுக்கு அமைவாக விண்ணப்பங்களை பூர்த்திசெய்து அனுப்பிவைக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் வேண்டியுள்ளார்.

மேலும் வெளியிடப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் மேலதிக விபரங்களை பெறுவதாயின் 011 2784208, 0112784537, 011 3188350, 0113140314 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் பரீட்சைகள் திணைக்களம் வேண்டியுள்ளது.