சரக்கு கொள்கலனில் பதுங்கி லண்டன் வந்த 31 பேர், ஒருவர் மரணம்

சரக்கு கொள்கலன் (shipping container) ஒன்றில் மறைந்துகொண்டு வந்திருந்த நிலையில், லண்டன் துறைமுக அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

tilbury_docks

மற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது.

பெண்கள், சிறார்கள் அடங்கலாக 31 பேர் குறித்த சரக்கு கொள்கலனில் மறைந்திருந்து லண்டனுக்கு வந்துள்ளனர்.

எசெக்ஸில் உள்ள டில்பரி இறங்குதுறையில் வைத்தே அதிகாரிகள் இந்த கொள்கலனை கைப்பற்றியிருந்தனர்.

நெதர்லாந்திலிருந்து வந்த கப்பலொன்று பொருள்களை இறக்கிக் கொண்டிருந்தபோது இந்த கொள்கலன் அகப்பட்டுள்ளது.

குறித்த இடத்திற்கு காவல்துறையினரும் ஆம்பியூலன்ஸ் வண்டி பணியாளர்களும் வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.