சம்பந்தன், அமெரிக்க தூதுவருக்கிடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்காவில் அனைத்து மக்களின் மகிழ்ச்சிக்கும் நன்மைக்குமான தனது சமாதானம் மற்றும் நல்லிணக்க எண்ணக் கருக்களை இதன்போது சம்பந்தன் பகிர்ந்துகொண்டதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts