சமையல் எரிவாயு விலையை மீள அதிகரிக்க வேண்டிவரும்!!

எதிர்காலத்தில் சமையல் எரிவாயு விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

உலகச் சந்தையில் எரிவாயு விலை வேகமாக அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்தார்.

லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு நிறுவனங்களையும் இணைத்து இலங்கையில் உள்நாட்டு எரிவாயுவை விற்கும் மற்றும் ‘ஜியோலிட்’ என்ற அரச நிறுவனத்தை நிறுவும் திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று லசந்த அழகியவண்ணா கூறினார்.

இந்த கூட்டு முயற்சியின் சபை உறுப்பினர்கள் ஏற்கனவே பதவி விலகியுள்ளதாக அவர் கூறினார்.

அனுரகுமார திஸாநாயக்கவின் கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, இலங்கையில் லிட்ரோ மற்றும் லாஃப் தனித்தனியாக எரிவாயுவை தொடர்ந்து விற்பனை செய்வதாகக் கூறினார்.

Recommended For You

About the Author: Editor