சனசமூக நிலையம் உடைப்பு

மல்லாகம் கோட்டைக்காடு சைவ வாலிபர் சங்க சனசமூக நிலையம் இனம் தெரியாதவர்களினால் வெள்ளிக்கிழமை (26) இரவு அடித்துடைக்கப்பட்டுள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் சனிக்கிழமை (27) தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக சனசமூக நிலைய நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட சனசமூக நிலையத்தின் முன் கதவுகள் மற்றும் யன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளமையால் சுமார் 75,000 ரூபாவுக்கும் மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.