சட்ட மா அதிபர் யாழ்ப்பாணம் நீதிமன்றுக்கு வருகை!!

சட்ட மா அதிபர் தப்புல்ல டி லிவேரா யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகை தந்துள்ளார்.

அவரை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் வரவேற்றார்.

வடக்கு மாகாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ள சட்ட மா அதிபர் இன்று காலை மன்னாருக்கு வருகை தந்தார். அங்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதிக்கான உத்தியோகபூர்வ இல்லத்துக்கு புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள சட்ட மா அதிபர் தப்புல்ல டி லிவேரா, நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகை தந்துள்ளார்.

மேல் நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளுடன் அவர் கலந்துரையாடவுள்ளார்.

Recommended For You

About the Author: Editor