சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

Avaa-groupசட்டவிரோதமான நோக்கங்களுக்காக வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் வாள்கள், கத்திகள் போன்ற கூரிய ஆயுதங்களை இரு வாரங்களுக்குள் தத்தமது பகுதி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும் படி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமது பகுதி கிராமசேவகர் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என தெரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கோப்பாய், வட்டுக்கோட்டை மற்றும் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இவற்றை ஒப்படைக்காமல் பதுக்கி வைத்திருந்தால் வீடுகளில் தேடுதல் நடத்தப்பட்டு அவை கைப்பற்றப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts