க.பொ.த உயர்தரப் பரீட்சாத்திகளுக்கு சிறப்பு அறிவிப்பு!!

க.பொ.த உயர்தரப் பரீட்சை அனுமதி அட்டையை இதுவரை பெறாத விண்ணப்பதாரர் இருப்பின், அவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

2021 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பரீட்சார்த்திகளில் எவரேனும் அனுமதி அட்டை கிடைக்கவில்லை என்றால், இலங்கையின் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk க்குச் சென்று, முதற்பக்கத்தில் A இல் உள்ள GCE (A / L) பரீட்சை 2021 (பதிவிறக்க அனுமதி அட்டைகள்) ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.

சரியான தேசிய அடையாள அட்டை எண் அல்லது பரீட்சை எண்ணை உள்ளீடு செய்வதன் மூலம் தொடர்புடைய அனுமதி அட்டையின் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.

அனுமதி அட்டையின் பெயர், விடயம் மற்றும் மொழி ஆகியவற்றைத் திருத்தவும் முடியும். அத்தகைய திருத்தங்களை ஒரு முறை மட்டுமே செய்ய முடியும்.

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் மார்ச் 05 ஆம் திகதி வரை நாடுமுழுவதும் 2 ஆயிரத்து 439 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.