பிரான்பற்று பண்டத்தரிப்பு ஆலயத்தில் 22வருடமாக பணியாற்றி வந்த பிரமசிறி உலகேஸ்வர குருக்களிடம் சட்டவிரோதமான முறையில் கோயில் சாவி பறிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த 4மாதங்களில் புதிய பரிபாலன சபையில் உபதலைவராக உள்ள கோபாலன் ஜெயரூபன் என்பவர் உலகேஸ்வர குருக்களிடம் தனிப்பட்ட குரோதத்தால் அவரை 19.05.2014 தொடக்கம்- 31.05.2014 வரையான காலப்பகுதி அதாவது இந்த இடைப்பட்ட 10நாட்களுக்குள் கோயிலை விட்டு வெளியேறுவதுடன் சாவியை தன்னிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார்.
ஆனால் அவர் அதை செய்யாமல் மக்களிடம் போய் கூறி அவர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பொதுமக்களிடம் கலந்து தீர்மானம் எடுக்கவில்லை எனவும் ,அதுமட்டுமல்லாது பொதுகூட்டம் கூட்டி முடிவை எடுத்திருக்கலாம் இதுவொரு பழிவாங்கும் செயல் எனவும் அப்பகுதி மக்கள் சார்பாக அவர் அந்த முறைப்பாட்டினை வழங்கினார்.
ஆனால் ஜெயரூபனிடம் இருந்து வந்த குரோதம் வளர்ந்து குருக்கள் வீதியோரமாக சென்று கொணடிருந்த வேளை அவரது ஆள்பலத்தினால் அவரை தள்ளிவிழுத்தி அவரிடம் இருந்த சாவியை சட்டவிரோதமாக பறித்துள்ளதுடன் இதுவொரு நீதி மழுங்கடிக்கப்பட்ட செயல் எனவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.