கோப்பாயில் விபத்து

கோப்பாய் பகுதியில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கட்டடசுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

2(103)

கவனயீனமாக சென்ற சைக்கிளுக்கும் முச்சக்கர வண்டிக்கும் வழிவிட முற்பட்ட வேளை தனியார் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் அந்த பஸ்ஸில் பயணித்த சிலர் சிறுகாயங்களுக்கு உள்ளானார்கள்.

அச்சுவேலி பகுதியிலிருந்து குறித்த பஸ் யாழ்ப்பாணம் நோக்கி வந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் தனியார் பஸ் பலத்த சேதங்களுக்குள்ளானது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.