கோடரி தாக்குதலில் முதியவர் படுகாயம்

புத்தூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கோடரித் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதியவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஒருவர், உறக்கத்திலிருந்த வயோதிபரின் காலை கோடரியால் கொத்தியுள்ளார்.

பணக் கொடுக்கல் – வாங்கல் விடயத்தில் இருந்த தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.