கொழும்பு சென்ற வான் விபத்தில் சிக்கியது: யாழ்.இளைஞன் பலி

ஹையேஸ் வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் மாதம்பை பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தனது தந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக அழைத்துச் சென்றபோது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் வான் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த காந்தி சுஜி (வயது 19) என்ற இளைஞரே விபத்தில் உயிரிழந்தார்.

உயிரிழந்த இளையஞரின் தந்தையும், நண்பரும் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்திசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.