கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க யாழில் புதிய விடுதிகள் தயார் நிலையில் உள்ளன- மாகாண சுகாதார பிரிவு

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவோருக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிய விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக மாகாண சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையிலுள்ள புதிய விடுதிகள், அதி தீவிர சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சை, ஒட்சிசன் தேவைப்படுவோருக்கு சிகிச்சை வழங்குவதற்கும் கர்ப்பிணிகளுக்கு தொற்று ஏற்படும்போது விசேட சிகிச்சை வழங்குவதற்கும் தயார்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தயார்படுத்தப்பட்டுள்ள புதிய விடுதிகளை அந்த வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வைரஸ் தொற்று ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு மாகாண சுகாதார பிரிவினரினால் சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor