கொரோனாவால் உயிரிழந்த சுயாதீன ஊடகவியலாளர் பிரகாஸின் பூதவுடல் தகனம்!

கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்திருந்த சுயாதீன ஊடகவியலாளரின் பூதவுடல் இன்றைய தினம் மின் தகனம் செய்யப்பட்டது.

கொடிகாமத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் பிரகாஸ் (வயது 26) கடந்த வாரம் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 02ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக அவரது பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்தில் இன்று (திங்கட்கிழமை) மின் தகனம் செய்யப்பட்டது.

அத்துடன் அவரது அஸ்தி அல்லாரை புதிய செபமாலை அன்னை தேவாலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சுயாதீன ஊடகவியலாளரான, பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொண்டார்.

எவ்வாறிருப்பினம் அவர் முன்னேறி, ஊடகத் துறையில் தனக்கொன்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor