கொடியேற்றத்தின் போது சங்கிலி அறுத்தவர் கைது

arrestநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பாகிய நிலையில், ஆலய உள்வீதியில் நின்றிருந்த வயோபதிப் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த சங்கிலியினை அறுத்த இளைஞனைக் கைதுசெய்ததாகப் யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணின் 4 பவுண் சங்கிலியினை மேற்படி சந்தேகநபர் அறுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் அங்கு சிவில் உடையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இளைஞனைக் கைதுசெய்தனர்.

மேற்படி சந்தேகநபர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.