கொக்குவிலில் வன்முறைக் கும்பல் அட்டூழியம்!!

கொக்குவில் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் வாகனங்களுக்கு தீயிட்டு அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றையதினம் இரவு இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் வீட்டு வளவுக்குள் புகுந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்டதுடன் பெறுமதியான பொருள்களை அடித்து நொருக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.