கொக்குவிலில் முச்சக்கர வண்டி சாரதி மீது வாள் வெட்டு!

கொக்குவில் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

அச்சுவேலி பகுதியை சேர்ந்த செ. ரதீஸ்குமார் (வயது 41) என்பவரே தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இரவு கொக்குவிலில் பகுதியில் இருந்து அச்சுவேலியில் உள்ள தனது வீடு நோக்கி முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று அவரை வழிமறித்து வாளினால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.