கேட்பாரின்றிக் கிடந்த மோட்டார் சைக்கிள் மீட்பு

திருநெல்வேலி – கேணியடி வைரவர் ஆலயத்திற்கு அருகில் அநாதரவாகக் கிடந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை பொலிசார் நேற்று இரவு மீட்டுள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிள் கடந்த இருவார காலத்திற்கும் மேலாக இரவு நேரங்களில் ஆலயத்திற்கு அருகில் காணப்படுவதாகவும் பகல் வேளைகளில் இருப்பதில்லை எனவும் அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நேற்றைய தினமும் மோட்டார் சைக்கிள் அங்கு கிடந்ததை அடுத்து கோப்பாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மோட்டார் சைக்கிளை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் இந்த மோட்டார் சைக்கிள் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்