குளவிகள் படையெடுப்பால் மூடப்பட்டது சாவ. இந்து ஆரம்ப பாடசாலை

wasp-kulaviசாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை வளாகத்தினுள் சிறிய உருவிலான குளவிகள் படையெடுத்துள்ளதால் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி சியாமளா கந்தசாமி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் :-

நேற்று பிற்பகல் திடிரென வந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட குளவிகள் பாடசாலை வகுப்பறையினுள் கூடுகட்டி கொண்டது இந்த நிலையில் நேற்று இரவு குறித்த குளவிக்கூடு எரித்துக் கலைக்கப்பட்டிருந்தது.

கலைக்கப்பட்ட குளவிகள் இன்று காலை பாடசாலை வளாகத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளதாக அதிபரினால் தென்மராட்சி வலயக்கல்வி பணிமனைக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீண்டும் வந்த குளவிகளை இன்று இரவு கலைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வழமை போன்று நாளை புதன்கிழமையிலிருந்து (02) பாடசாலை நடைபெறுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தில் திங்கட்கிழமை (30) குளவிக் கொட்டுக்குள்ளான 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts