குளவிகள் கொட்டுக்கு இலக்கான 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

wasp-kulaviமீசாலை ஆலடிப் பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளின் போது, குளவிகள் கொட்டியதில் 10 பேர் பாதிக்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை (04) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆலய வளாகத்திலிருந்த குளவிக்கூடொன்று காற்றில் ஆடி குளவிகள் கலைந்தமையினால், ஆலயத்தில் நின்றவர்கள் மீது குளவிகள் கொட்டியுள்ளன.

சாவகச்சேரி பகுதியில் குளவிக்கொட்டிற்கு இலக்காவோர் நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றதுடன் அண்மையில் சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தில் குளவிக் கொட்டிற்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டதுடன், குளவிகளின் தாக்கத்தினால் சாவகச்சேரி ஆரம்பப் பாடசாலை ஒரு நாள் இயங்காமல் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.