குருநகர் மற்றும் பருத்தித்துறையைச் சேர்ந்த இருவருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பாசையூர் மேற்கில் உள்ள கடலுணவு நிறுவனம் ஒன்றிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று திரும்பியதும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இவர்கள் பேலியகொட சென்று திரும்பிய மறுநாளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அண்மையிலுள்ள மீன் சந்தைக்குச் சென்றுள்ளனர் என்று தெரியவருகின்றது.
இவர்களுடன் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்றும் சுகாதாரப் பிரிவின் சில தகவல்கள் கூறுகின்றன.
தொற்றுக்குள்ளான இருவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும், இவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.