குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு

யாழ். புத்தூர் வடக்குப்பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த கே.உதயராசா (வயது 53) என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (23) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரைக் கொண்ட கும்பல், வீடொன்றில் வைத்து இவர் மீது வாள்வெட்டு மேற்கொண்டுள்ளனர்.

முகத்தை மூடிக்கட்டியவாறு வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இக்கும்பல், இவரை வாளால் வெட்டியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.