கிளிநொச்சி பளை பகுதியில் கோர விபத்து : மேலும் ஒருவர் பலி

கிளிநொச்சி பளை, புதுக்காடு சந்திக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புநோக்கி பயணித்த தனியார் பேரூந்துடன், வவுனியாவில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த வான் ஒன்று மோதியுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற மரண வீடொன்றில் பங்கேற்றுவிட்டு யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே பலியானதுடன், காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் ஆறு பேர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பேரூந்தின் சாரதியை கைது செய்துள்ள பளை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

15-09-2016-3

15-09-2016-2

15-09-2016


இரண்டாம் இணைப்பு : உயிரிழந்தவர்களின் விபரங்கள்

குறித்த விபத்தில் வேனில் பயணித்த நால்வரே உயிரிழந்துள்ளனர். நெல்லியடி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எஸ்.பசுபதி (வயது – 78) ப.பொன்னம்மா (வயது – 75) ப.நந்தமூர்த்தி (வயது – 43) ஆகியோரும் அவர்களின் உறவுப்பெண்ணான 55 வயது மதிக்கத்தக்க ஒருவருமே விபத்தில் உயிரிழந்தவர்களாவர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் பெயர் விபரங்களை இது வரை பெறமுடியவில்லை.

இந்த விபத்தில் காயமடைந்த ஐந்து பேரில் ஒருவர் மேலதிக சிகிசைக்காக யாழ் போதானாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஏனையவர்கள் பளை மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

Recommended For You

About the Author: Editor