கிளிநொச்சி – அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்து மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த சரக்கு ரயிலுடன் ஜூப் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெண் மற்றும் சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.