கிளிநொச்சியில் மூன்றாவது கொரோனா தொற்றாளர் கண்டறிவு!

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 347 பேருக்குநேற்றைய தினம் கொரோனாவுக்கான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர், கொழும்பில் பணிபுரிவதுடன் வெள்ளவத்தையிலிருந்து கோணாவிலுக்கு வந்த நிலையில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய பரிசோதனையில வடக்கு மாகாணத்தில் ஏனையவர்களுக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor